அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2024-08-14 10:10 GMT
விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆட்டையாம்பட்டியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தாசில்தார் செல்வராஜ், வேம்படிதாளம் வருவாய் ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார், நேரு யுவகேந்திரா சங்க தேசிய சேவை தொண்டர் மணிகண்டன், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துறையின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மவுனமொழி நாடகம் மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன. போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், இளைஞர் அமைப்பின் தலைவர் மெய்பிரபு, தமிழரசி ஆகியோர் செய்து இருந்தனர்.

Similar News