ஜுலை மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் இம்மாத வாங்கிக்கலாம்.
ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டம் ஜுலை மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, இயக்குநா் அவர்களால் பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளி முடிவுகள் மேற்கொள்ள தாமதம் ஆனதால் ஜுலை-2024 மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு பொருட்களை குறித்த நேரத்தில் வழங்க இயலவில்லை என்றும், ஜுலை மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு நகர்வு தாமதமானதை தொடர்ந்து ஜுலை-2024 மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம்பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் கடைகளில் இருப்பு பெறப்பட்டவுடன் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்