ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள சோக்கையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் தங்கியிருந்து மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். சதீஷ்குமார் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திருநங்கை ஒருவர் வழிமறித்து தாக்கி ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சதீஷ்குமாரிடம் பணம் பறித்ததாக முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ரிதினா (வயது 20) என்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.