சேலத்தில் குளிர்பானம் என நினைத்து டானிக்கை குடித்த வாலிபர் சாவு
போலீசார் விசாரணை
சேலம் செவ்வாய்பேட்டை சுந்தரம்செட்டி தெருவை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 24), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு குளிர்பானம் என நினைத்து வீட்டில் இருந்த உடல் வலிக்கான டானிக்கை அதிகம் குடித்து உள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.