சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தேசிய கொடி ஏற்றி வைத்தார்
சுதந்திர தின விழாவையொட்டி
நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் பிருந்தா தேவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார் மேலும் சிறந்த அரசு பணியாளர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன இந்த விழாவில் சேலம் சரக டி ஐ ஜி உமா மாவட்ட போலீஸ் அதிகாரி கௌதம் கேயல் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் உள்பட அரசு அலுவலர்கள் ஊழியர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.