பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் (15.08.2024) நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பு வழிபாடு செய்து, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் சுமார் 1,500 பொதுமக்களுக்கு அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் ஆகியோர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தபின்னர், பின்னர், 200 ஏழைப் பெண்களுக்கு நூல் புடவைகளை வழங்கி பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.