ஸ்ரீ ஈச்சமரத்து காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

நிகழ்வுகள்

Update: 2024-08-17 11:20 GMT
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் முத்துக்குடாகிராமத்தின் அமைந்துள்ள ஸ்ரீ ஈச்சமரத்து காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டுஇரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள முத்துக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஈச்ச மரத்து காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு, சின்ன மாடு, நாலு பல் கன்று, போன்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது இதில் பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும் சின்ன மாடு பிரிவில் 32 மாட்டு வண்டிகளும் நாலு பல் கன்று குட்டி பிரிவில் 33 ஜோடி மாடுகளும் மொத்தம் 78ஜோடி மாடுகள் கலந்துகொண்டு ஒன்றை ஒன்று முந்தி செல்ல விறுவிறுப்பாக நடந்த மாட்டுவண்டி பந்தயம் இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்க பணம், கேடயம் வழங்கப்பட்டதுசாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்

Similar News