கரூரில்,சமூக வலைத்தளத்தில் பரவிய தகவலால் ஏமாந்து போன மகளிர்.

கரூரில்,சமூக வலைத்தளத்தில் பரவிய தகவலால் ஏமாந்து போன மகளிர்.

Update: 2024-08-19 14:22 GMT
கரூரில்,சமூக வலைத்தளத்தில் பரவிய தகவலால் ஏமாந்து போன மகளிர். கரூர் மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில், நேற்று மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்படுவதாக தகவல் பரவியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று, அது போன்று எந்த ஒரு திட்டமும் இல்லை என மறுப்பு தெரிவித்ததோடு, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார். ஆயினும், அதனை அறியாமல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகையை கேட்டு விண்ணப்பிக்க வந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அதிகாரிகள் அதுபோன்று எந்த தகவலும் இல்லை எனவும், வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் மகளிர் உரிமைத்தொகை பெற வந்த மகளிர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Similar News