சின்னகுளத்துப் பட்டியில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
சின்னகுளத்துப் பட்டியில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
சின்னகுளத்துப் பட்டியில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது சின்ன குளத்துப்பட்டி.இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 36. இவர் அப்பகுதியில் கார்பென்டராக பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷித் வயது 2. ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள வாட்டர் டேங்க் அருகே சிறுவன் தர்ஷித் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியில் எட்டிப் பார்த்தபோது தவறுதலாக தண்ணீர் விழுந்து உள்ளார். அப்போது விளைநிலங்களுக்கு தண்ணீர் மோட்டார் மூலம் இறைத்து கொண்டிருந்ததால், சிறுவன் தண்ணீர் செல்லும் குழாய் வழியாக அடித்துச் செல்லப்பட்டான். தர்ஷித்தோடு உடன் விளையாடி கொண்டிருந்த மற்றொரு சிறுவன் இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் செல்லும் குழாயை உடைத்து சிறுவனை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தர்ஷித்தின் தந்தை முருகேசன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிறுவன் தர்ஷித்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் குளித்தலை காவல்துறையினர்.