கறம்பக்குடி தட்டா ஊரணியை சேர்ந்த கனகராஜ் நேற்று மாலை 7 மணிக்கு வீட்டில் மின்சார பல்பை மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பானுமதி அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி SSI சற்குணம் விசாரணை செய்து வருகிறார். மேலும் உடல் கூறு ஆய்வுக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.