தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மாபெரும் முகாம் வருகின்ற 24ஆம் தேதி மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.