திருக்கோவிலுார், சந்தப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் உரக்கழிவு கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் திவ்யாயிடம் மனு அளித்தனர் . இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் கட்டுமான பணிக்காக வந்திருந்த ஜேசிபியை அப்பகுதி பொதுமக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.