கரூர் அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் மண்டலபிஷேக பூர்த்தி லட்சார்சனை விழா நடைபெற்று வருகிறது.
கரூர் அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் மண்டலபிஷேக பூர்த்தி லட்சார்சனை விழா நடைபெற்று வருகிறது.
கரூர் அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் மண்டலபிஷேக பூர்த்தி லட்சார்சனை விழா நடைபெற்று வருகிறது. கரூர் மாநகரத்தில் அமர்ந்து அருள் பாலித்து, அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னம் பாலிக்கும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் வடிவமான அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன் அம்பிகையின் ஆலய கும்பாபிஷேகம் கடந்த மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் செய்து பூர்த்தியானதை தொடர்ந்து, ஆலயத்தில் உள்ள அருள்மிகு விநாயகர், அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன், அருள்மிகு மதுரை வீரன் சுவாமிகளுக்கு மண்டலபிஷேக பூர்த்தி லட்சார்சனை இன்று காலை 8 மணி முதல் துவங்கி இன்று நாள் முழுவதும் நடைபெறும். நாளை ஆகஸ்ட் 28ஆம் தேதி 108 சங்காபிஷேக யாக பூஜை விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று ஆலய வளாகத்தில் சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை செய்யும் பொருட்டு, வேத மந்திரங்களை முழங்கி, மலர்களால் லட்சார்ச்சனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டு லட்சார்சனை விழாவை சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாட்டினை அறங்காவலர் குழுத் தலைவர் முருகேசன், அறங்காவலர்கள் முருகையன், துரைசாமி மற்றும் நிர்வாக குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.