பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை பெறும் மகிழ்ச்சியில் வட்டமிட்டு கும்மி அடித்த மாணவிகள்.

பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை பெறும் மகிழ்ச்சியில் வட்டமிட்டு கும்மி அடித்த மாணவிகள்.

Update: 2024-09-02 10:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை பெறும் மகிழ்ச்சியில் வட்டமிட்டு கும்மி அடித்த மாணவிகள். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, பால விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ - மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர்,மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மோகன்,பள்ளி மாணவ- மாணவிகள், ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கும் பல்வேறு திட்டங்களை பாடலாக மாணவி பாட, அதற்கேற்றவாறு பள்ளி மாணவிகள் வட்டமிட்டு கும்மி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் 170 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. மிதிவண்டிகளை பெற்றுக் கொண்ட மாணவ- மாணவியர் தமிழக அரசுக்கும், எம்எல்ஏவுக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Similar News