அரசு அனுமதியின்றி வெட்டி சாய்க்கப்பட்டப் பனை மரங்கள்
திருமழிசை அருகே அரசு அனுமதியின்றி ஏராளமான பனை மரங்களை வேரோடு வெட்டி வெட்டி சாய்ப்பு. பனை மரத்தை வெட்டியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி
திருமழிசை அருகே அரசு அனுமதியின்றி ஏராளமான பனை மரங்களை வேரோடு வெட்டி வெட்டி சாய்ப்பு. பனை மரத்தை வெட்டியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி திருமழிசை பகுதியில் தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக பனைமரம் கருதப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது தமிழ்நாட்டில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஆட்சியரின் அனுமதி பெறாமல் தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூந்தமல்லி ஒன்றியத்தை சேர்ந்த ஜெயக்குமார் பல்வேறு பனை மரங்களை வேரோடு பிடுங்கி வீசி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது இந்தக் கால்வாய் கறைகளில் ஏராளமான பனை மரங்கள் சூழ்ந்திருந்தன பொதுப்பணித்துறை கால்வாய்க்கு பக்கத்திலேயே முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும், பூவிருந்த வல்லி ஊராட்சி ஒன்றிய தலைவருமான ஜெயகுமாருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த காலி நிலத்திலும் கால்வாய் கரையின் மீதும் இருந்த பனை மரங்களை வருவாய் துறையினரிடம் எவ்வித அனுமதியும் வாங்காமல் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டதால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனை மரங்கள் சொந்த நிலத்தில் இருந்தாலும் அதை வெட்டுவதற்கு முன்பாக அரசிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ள நிலையில் விதி முறைகளை காற்றில் பறக்க விட்டு மரங்களை வேரோடு வெட்டி சாய்த்துள்ளனர் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது அதிகாரத்தில் இருப்பதால் அரசு விதியை மதிக்கமல் பனை மரங்களை வேரோடு வெட்டிய பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.