கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நான்கு பேரை கைது செய்த அமலாக்கத்துறை
கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நான்கு பேரை கைது செய்த அமலாக்கத்துறை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமாராஜிபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் அரவிந்தன் பிரகாஷ் அஜித் ஆகிய நான்கு பேரின் வங்கி கணக்கில் சுமார் மூன்று கோடி ஆன்லைன் பணமாற்றம் நடைபெற்று உள்ளதாக அமலாக்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அமலாக்கத்துறையினர் 20க்கும் மேற்ப்பட்டோர் ஐந்து வாகனங்களில் நேற்று காலை வாலிபர்கள் வீடுகளுக்கு சென்றனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். வாலிபர்கள் மூன்று பேரில் வீடுகளில் தனி தனிக்குழுக்களாக சோதனை நடைபெற்றது, வாலிபர்கள் வங்கி கணக்கு விவரங்கள், அவர்களின் குடும்ப பின்னணி, தொழில், தொடர்புகள், பண பரிமாற்றம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் வாலிபர்களிடம் துருவி துருவி விசாரணை செய்து விவரங்கள் சேகரித்தனர்.10 மணி நேர விசாரணைக்கு பிறகு மாலை 6 மணி அளவில் வாலிபர்கள் மூன்று பேரை பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் அங்கு தனி அறையில் வைத்து தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை விசாரணையில் ஈடுபட்டு தமிழரசன் அரவிந்தன் பிரகாஷ் தம்பி அஜித் உட்பட நான்கு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூர் அழைத்துச் சென்றனர்.