நர்சிங் கல்லூரியில் ஓணம் திருவிழா: மாணவிகள் அசத்தல்
கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் ஓணம் திருவிழா: மாணவிகள் அசத்தல்
கோவில்பட்டி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் ஓணம் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கேரளா மக்களால் சாதி மத வேறுபாடு இன்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை கேரளத்தின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.மலையாள ஆண்டில் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளன்று அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்பது ஐதிகம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் நடந்த ஓணம் திருவிழாவிற்கு கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா தலைமை வகித்தார். இதில் கல்லூரி மாணவிகளுக்கு அத்த பூ கோலப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும், மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி ஆசிரியர்கள் தேவி, ரென்சி,பூபதி,ரசியா பானு, திவ்யா, ஸ்ரீரங்கம்மாள், கார்த்திக், வனராஜா உள்பட நர்சிங் கல்லூரி மாணவிகள், ஐடிஐ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.