பகுதி சபா கூட்டம்: பொது மக்கள் ஏமாற்றம்!!

தூத்துக்குடி 45வது வார்டு பகுதியில் சபா கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2024-09-15 10:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி 45வது வார்டு பகுதியில் சபா கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தூத்துக்குடி மாநகராட்சி 60 வது வார்டுகள் முழுவதும் பகுதி சபா கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவித்த நிலையில் ஒரு சில வார்டுகளில் பகுதி சபா கூட்டம் எப்போது நடைபெற்றது என்று தெரியாமல் பொது மக்கள் தவித்தனர் 45 வது வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் இடம் தெரியாமல் அந்த வார்டு பகுதி மக்கள் மனு கொடுக்க முடியாமல் தவித்தனர். பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளை எடுத்து சொல்வதற்காக மதிமுக மற்றும் பொது மக்கள் பகுதி சபா நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்த போது கூட்டம் நடைபெறுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மேலும் பகுதி சபா கூட்டம் நடத்தக்கூடிய மாமன்ற உறுப்பினர் மற்றும்ப குதி சபா உறுப்பினர்களை தொடர்பு கொண்ட போது இன்று பல்வேறு பணிகள் இருப்பதால் கூட்டத்தை பத்து நிமிடத்தில் முடித்து விட்டு சென்றதாக கூறினார்கள். பகுதி சபா கூட்டமானது காலையில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற கூடிய நிலையில் தங்களது சொந்த காரணத்திற்காக பகுதி சபா கூட்டத்தை முடித்து கொண்டு சென்று விட்டனர். இப்படி கூட்டத்தை அவர்களின் விருப்பப்படி முடித்து கொண்டு சென்று விட்டால் எங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எப்படி தெரிவிப்பது என்று மதிமுக நிர்வாகிகள், 45 வது வார்டு பகுதி பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News