கலெக்டர் பெயரில் போலி கணக்கு போலீசில் மாவட்ட நிர்வாகம் புகார்!

அரசு செய்திகள்

Update: 2024-09-23 03:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை தமிழகத்தில் சமீபகாலமாக மாவட்ட கலெக்டர்கள் புகைப்படத்தை கொண்டு சமூக வலைதளத்தில் போலி கணக்குகளை தொடங்கி பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் புதுகை கலெக்டர் அருணா புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் போலி கணக்கு தொடங்கிய மர்ம நபர் ஒருவர், பழைய பர்னிச்சர் பொருட்களை மிகவும் மலிவான விலையில் விற்பதாகவும், அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பினார். இந்த குறுஞ்செய்தி அதிகமானோரால் பார்வையிடப்பட்டு மற்றவர்களுக்கும் பகிரப்பட்டிருந்தது. இதையறிந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுபற்றி கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக சம்பந்தபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்ப ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News