துறைமுகத்தில் நேர்முகத் தேர்வு ரத்து : ஹெச்எம்எஸ் கண்டனம்!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு ஹெச்.எம்.எஸ். சங்க பொதுச் செயலாளர் சத்தியநாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு ஹெச்.எம்.எஸ். சங்க பொதுச் செயலாளர் சத்தியநாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சட்ட அலுவலர், உதவி செயற்பொறியாளர் (மெக்கானிக்கல் & சிவில்) ஆகிய பதவிகளுக்கு மூன்று பதவிகளுக்கு 367 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் நடத்திய பரிட்சையில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் நேர்முகத் தேர்வில் யாரும் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி ரத்து செய்துவிட்டனர். மேலும் 3 மறு தேதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று புதிய துறைமுகம் நிர்வாகம் அறிவித்துள்ளது. துறைமுகத்தில் பணியாற்றும் வடக்கத்திய அதிகாரிகள் இங்குள்ளவர்கள் யாருமே இப்பதவிகளுக்கு தகுதியில்லாதவர்கள் என சகலரையும் நிராகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் நேர்முகத் தேர்வு வெளிப்படையாக நடத்திருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க முடியுமா? இதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் வெளிப்படையாக தேர்வு நடத்த வேண்டும் என்று கூறினார்