ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்...
ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 22ஆம் பூச்சாட்டுதளுடன் திருவிழா தொடங்கி தினம்தோறும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா அழைத்து வரப்பட்டது.இந்த நிலையில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற முடிந்த நிலையில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் தேர்த்திருவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில்,காவல்துறையினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி,சின்ன கடைவீதி வழியாக சென்று இறுதியாக கடைவீதியில் நிறுத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்..