புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாசலில் பல ஆண்டுகளாக துருப்பிடித்த அரசுக்கு சொந்தமான ஜீப் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. இப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகள் அதிகமாக நடமாட்டம் உள்ளது. அவை வாகனத்துக்கு உள்ளே செல்லும் அபாயமும் உள்ளது. ஆகவே துருப்பிடித்த வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆட்சியர் அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.