நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்!

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும் தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட கிராம கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகையுடன்...

Update: 2024-11-17 10:22 GMT
கிராமங்கள்தோறும் புதிய நிா்வாகிகள் கொண்ட கமிட்டியை உருவாக்கி காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கடந்த வாரம் நாமக்கல்லில் நடைபெற்ற கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கிராம,பேரூா்,நகர, மாநகர பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார். அதன் தொடர்ச்சியாக தற்போது நாமக்கல்,சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு செயலாளர் ராம் மோகன் அறிவித்தார் அதன் விவரம் வருமாறு...
எம்.ஆர்.சுரேஷ், ஜெ.எஸ்.ஆறுமுகம், டாக்டர் எம்.பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களது பணி வருகிற நவம்பர் மாதம் இறுதிக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு சூழல்களில் தற்காலிகமாக விலகியவர்களை மீண்டும் கட்சியில் முழுமையாக ஈடுபடச் செய்ய வேண்டியது இவர்களின் முக்கிய பணியாகும். மேலும் வெகுஜன மக்களை, குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரை புதிதாக உருவாக்கும் கமிட்டிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். இதன்மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம கமிட்டிகளை முழுமையாக அமைத்து, வார்டு மற்றும் வாக்குச்சாவடிகளில் தகுதியான நபர்களை அடிப்படை கமிட்டி நிர்வாகிகளாக நியமிக்கும் பணியை மாவட்ட, வட்டார கமிட்டிகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டியது இந்த கிராம கமிட்டி பொறுப்பாளர்களின் பணி என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் உள்ள 77 மாவட்டத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News