திருக்கோவிலுார், தென் பெண்ணை ஆற்றின் ஓரத்தில் பம்ப்ஹவுஸ் செல்லும் வழியில், புதிதாக நவீன எரி வாயு தகன மேடை நகராட்சி சார்பில் கட்டப்பட்டது.இதனை மேம்படுத்தி, பராமரிப்பு மேற்கொள்ளும் பொறுப்பை திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் செய்ய முன்வந்தது. இதற்கான ஆணையை நகர மன்ற தலைவர் முருகன், கமிஷனர் திவ்யா ஆகியோர் ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோதம்சந்த், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் வாசன் ஆகியோரிடம் வழங்கினர். நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், பேரூராட்சி முன்னாள் துணைச் சேர்மன் குணா, நகர மன்ற உறுப்பினர் சக்திவேல் உடனிருந்தனர்.