திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு செய்வதாக கூறி நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முன்மிரட்டும் தொனியில்கேள்விகேட்டஅருண் ராஜ்

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு செய்வதாக கூறி நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் மத்தியில் கேள்வி கேட்பது போல நடந்து கொள்வதும் அமைச்சர் எம்எல்ஏக்கள் எம்பிகளை போலவும் அருண் ராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது;

Update: 2026-02-03 18:18 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் சாக்கடை கழிவுநீர் சரிவர செல்லாமல் அடைத்துக் கொண்டிருப்பதாகவும் அதனை த.வெ.க கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜிடம் மக்கள் புகார் தெரிவித்ததாகவும் இதனையடுத்து உடனடியாக நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு நேரில் சென்ற அருண்ராஜ், குடியிருப்பு வாசிகளை அழைத்து சென்று அந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாயை பார்வையிட்டார். அப்போது, சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அருண்ராஜிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தி பெருகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாவதாக கூறிய பொது மக்கள் சில சமயங்களில் கழிவுநீர் கால்வாயில் குழந்தைகள் விழுவதாகவும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக அருண் ராஜிடம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அருண்ராஜ் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் இடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் உடனடியாக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு அலுவலர் சோலைராஜா என்பவரை அந்த இடத்தில் மக்கள் குறை என்னவென்று கேட்டு தீர்வு செய்து விட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார்.இந்த நிலையில் அருண்ராஜ் நகராட்சி துப்புரவு அலுவலர் வந்தவுடன் அவரிடம் இப்படி தான் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அளவுக்கு வைத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து துப்புரவு அலுவலர் தினசரி கால்வாய் அடைப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது அப்போது மற்ற பணிகளுக்கும் சென்று விட்டு ஒவ்வொரு பகுதியாகவும் வந்து சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கின்றோம் இதையும் சுத்தம் செய்து விடுகிறோம் என்று கூறியுள்ளார் ஆனால் அருண் ராஜ் நகராட்சி பணியாளரிடம் தினமும் அகற்றினால் எப்படி இவ்வளவு தேங்கி நிற்கும் என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் அவரிடம் மிரட்டும் தோனியில் பேசினார். பின்னர், சாக்கடை கழிவுகளை உடனடியாக அகற்றி, இனிமேல் கழிவுநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம் எல் ஏ எம்பிக்களை போல மக்கள் மத்தியில் நடந்து கொண்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமில்லாமல் த.வெ.க. நிர்வாகிகள் கூடவே இருந்து சரியாக பணிகள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவு போட்டார். தான் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி என்று நினைக்காமல் தற்போது பதவியில் இருப்பது போன்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் எம்பிக்களை போலவும் மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து இவ்வாறு அருண்ராஜ் நடந்து கொண்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் மறைந்த முதல்வர் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி காலையிலேயே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மாலை சுமார் 6:30 மணிக்கு மேல் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்ண்ராஜ் தனது கட்சியுடன் வந்து மாலை அணிவித்தார்அந்தி வேலையில் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்துவது திருச்செங்கோடு பகுதியில் இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.மாலை அணிவித்து விட்டு வந்த அருண் ராஜிடம் செய்தியாளர்கள்பேசிய போது எங்கள் கொள்கை தலைவர்களில் ஒருவராக கருதும் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அவரது நினைவு தினத்தை ஒட்டி மாலை அணிவித்திருக்கிறோம் அவரது கொள்கைகளை மறந்து திமுகவை போல் இல்லாமல் கொள்கைகளை வழி நடத்தும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் திகழ்ந்து வருகிறது என கூறினார் ஒன்றிய அரசின்நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்டபோது தமிழக மக்களுக்கு என எதுவும் செய்யாமல் முற்றிலும் புறக்கணித்து வழியிடப்பட்ட நீதி நிலை அறிக்கை இது எனக்கு கூறினார் தமிழக அரசுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லையே இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது தமிழக அரசுக்கு முறையாக சேர வேண்டிய பணத்தை மத்திய அரசு தரம் இருக்கிறது மாநில சுயாட்சி எங்கள் கொள்கை இதனை நாங்கள் முற்றிலும் கண்டிக்கிறோம் எனக்கு ஒரு நாள் இதுவரை இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எந்த அறிக்கையோ பேட்டையோ தரப்படவில்லையே என கேட்டதற்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் எனக் கூறினார் மக்கள் பிரச்சனைகளில் போராட்டங்கள் மௌனம் காக்குகிறீர்களே என பொதுமக்கள் கருதுகின்றனர் செய்தியாளர் கேள்வி கேட்டபோது அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும் நாங்கள் போராட்டம் நடத்தி இருக்கிறோம் எனக்கு கூறினார்ஆளுங்கட்ச்சியாக வருவதற்கு முன்னே அதிகாரிகளை மிரட்டுவதாக இன்றைக்கு நடந்த சம்பவத்தில் ஒரு பேச்சு அடைந்துள்ளது என கூறிய போது தவறு நடந்திருக்கிறது அது குறித்து கேட்டால் மிரட்டுவதாக ஆகிவிடுமா போராட்டம் நடத்துகிறோம் என சொன்ன மக்களை இருங்கள் அதிகாரிகள் வரட்டும் கேட்போம் சரி செய்வார்கள் எனக்கூறி நான்தான் தடுத்து நிறுத்தினேன் எனக்கு கூறினார் முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி என்பதால் அதே தோரணையில் அதிகாரிகளை மிரட்டுகிறீர்கள் என கருத்து சொல்லப்படுகிறது என கேட்டபோது எங்களுக்கு தந்திருப்பது பதவியல்ல பொறுப்பு நாங்கள் யாரையும் மிரட்டுவதில்லை மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய சொல்கிறோமே தவிர வேறில்லை எனக் கூறினார்நிகழ்ச்சியின் போது கட்சி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்

Similar News