திருச்செங்கோடுஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை ஒட்டிசிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை ஒட்டிசிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து.கைலாசநாதர் ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கிழக்கு நகர திமுக செயலாளர் நகர்மன்ற துணைத்தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்;

Update: 2026-02-03 15:32 GMT
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சார்பில் திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாகதிருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகர் மன்ற துணைத் தலைவர் கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் முடவர்ந்தனர் நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சின்னதுரை அரங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து அறங்காவலர்கள் பிரபாகரன் சித்ராவண்ண கண்ணன் அர்த்தனாரி பச்சியப்பன் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் உணவருந்தினர் முன்னதாக கைலாசநாதர் கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

Similar News