மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை ஒட்டிதிருச்செங்கோட்டில் திமுக மற்றும் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா நினைவு தினத்தை திருச்செங்கோடு கிழக்கு, மேற்கு நகர திமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைதி ஊர்வலம் இதே போல் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தலைமையில் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை;
மறைந்ததமிழ்நாடு முன்னாள் முதல்வரும்திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை ஒட்டி செயலாளர்திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில்பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது தொடர்ந்து திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் தலைமையில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் திமுக முன்னணியினர் நான்கு ரதவீதிகள் வழியாக மௌன ஊர்வலமாக சென்றுநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு வடக்கு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன்மத்திய ஒன்றிய செயலாளர்அருண்குமார்மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் பரமானந்தம் முன்னாள் மாவட்ட அவை தலைவர் தாண்டவன்,நகர மகளிர் அணி அமைப்பாளர் கண்ணாம்பாள்மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளிட்டகிளைக் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி தொண்டர் அணி மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் முருகேசன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர்நகர துணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் வழக்கறிஞர் பரணிதரன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர் தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் சபரி தங்கவேல் நகர அம்மா பேரவை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,நகர் மன்ற உறுப்பினர் மல்லிகா கூட்டுறவாளர் ராமமூர்த்தி அதிமுக சார்பணி நிர்வாகி பாலுமற்றும் மகளிர் அணியினர் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்