திருச்செங்கோடு அருகே வழித்தடத்தை மறித்து வேலி போட்டு நடை பாதையில் இடைஞ்சல் ஏற்படுத்தியதை கண்டித்து குட்டி மேய்க்கம் பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செங்கோட்டை அடுத்த குட்டி மேய்க்கம்பட்டி பகுதி ஸ்ரீநகர், புதுக்காடு, தங்கம் நகர், , உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையை திடீரென பட்டா நிலம் எனக்கூறி அதன் உரிமையாளர் பொன்னுசாமி இரும்பு வேலி போட முயற்சி கண்டித்து 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்திடீர் சாலை மறியல்;

Update: 2026-02-03 15:24 GMT
திருச்செங்கோடு ஒன்றியம் ஓ ராஜபாளையம் ஊராட்சி குட்டி மேக்கம்பட்டி பகுதியில் உள்ளசர்வே எண் 321 / 3 A என்ற சுமார் ஒரு ஏக்கர் நாலு சென்ட் நிலம் அம்மாவாசை கவுண்டர் என்கிற பொன்னுசாமி கவுண்டர் சொந்தமானது இதை அடுத்துள்ள மற்றொரு நிலத்தைரியல் எஸ்டேட் காரர் ஒருவருக்கு விற்று உள்ளார் அவருக்கு பத்திரமிதி கொடுக்கும்போது மாமுல் தடம் என எழுதிக் கொடுத்துள்ளார் அதனை 25 பேர் வாங்கி உள்ளனர் இந்த நிலையில் அதில் 12 பேர் அந்த மாமூல் தடத்தை பஞ்சாயத்துக்கு ஒப்படைத்து பஞ்சாயத்து மூலம் கான்கிரீட் சாலை போடும் பணி நடந்தது என்னுடைய நிலத்தை நான் ஒப்படைக்காமல் வேறொரு ஒப்படைத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதற்குரிய விலையை கொடுத்துவிட்டு சாலை போடும்படியும்பொன்னுசாமி கூறியுள்ளார் இதனை எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது குறித்து முக்கிய பிரமுகர்கள் சிலர் பேசி 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை பொன்னுசாமிக்கு கொடுத்துவிட்டு அந்த நிலத்தை எழுதி வாங்கி பஞ்சாயத்துக்கு கொடுத்து விடுவது என முடிவு செய்துள்ளனர் ஆனால் பேசியபடி 10 லட்சம் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் பொன்னுசாமி இரும்பு வேலி போட குழி தோண்ட தொடங்கினார்மெயின் ரோடு அருகே 20 அடி சாலையாக தொடங்கி ஒரு இடத்தில் மூன்று அடியாக குறுகி மற்றும் ஒரு இடத்தில் 20 அடியாக விஸ்வரனம் ஆகிறது இதனால் பொதுமக்கள் பள்ளிக்குச் செல்ல மருத்துவமனைக்கு செல்ல அவசர காலங்களுக்கு பயன்படுத்த சவ உறுதிகள் வர முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர் சுமார் 200 குடும்பத்தினர் அங்கு வசித்து வருவதால் தங்களுக்கு உரிய தீர்வு வேண்டும் என வலியுறுத்திகூலிக்காரன் நத்தம் ரோட்டில் இந்த திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுசாலை மறியல் குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில்விரைந்து வந்த போலீசார் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோர் உள்ளனர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது பேசியபடி பணம் கொடுத்தால் ரோட்டை எழுதிக் கொடுத்து விடுவதாக பொன்னுசாமி தெரிவித்தார் சாலை மறியல் குறித்து பாதிக்கப்பட்ட சரண்யா, சந்தியா, சரவணன் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது ஓ ராஜபாளையம் கிராமம் குட்டி நாயக்கம்பட்டி பகுதியில் ஸ்ரீநகர், தங்கம் நகர்,பள்ளக்காடு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு வீட்டை கிரயம் செய்து வரும்போது பொது வழித்தடம் எனக் கூறிவிட்டு தற்போது பட்டா நிலம் எனக் கூறுகின்றனர் இதற்கான கிரையப்பத்திரம் எங்களிடம் உள்ளது ஆனாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரகதிட்டத்தில் காங்கிரீட் சாலை அமைக்கஅனுமதி பெறப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்ற வந்த நிலையில்திடீரென ரோட்டை மரித்து எங்களுக்கு ஒரு அவசர காலங்களில் செல்ல முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் வேலி அமைக்கபொன்னுசாமி முயற்சித்து வருகிறார்.எங்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோம் என கூறினார்கள்.இந்த மனிதர்களால் கோழிக்கால் நத்தம் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News