கொங்குநாடு கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கு!-அதிமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் சிறப்புரை.

கொங்குநாடு கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றார்.;

Update: 2026-02-03 16:04 GMT
தோளூர்பட்டியில் அமைந்துள்ள கொங்குநாடு கல்லூரியில் மாணவர்களிடையே தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொழில்முனைவோர் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பேசுகையில்....இன்றைய சூழலில் தொழில்முனைவு வாய்ப்புகள், இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதன் அவசியம், அரசு வழங்கும் தொழில்முனைவு திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.நிகழ்ச்சிக்கு கொங்குநாடு கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி தலைமை வகித்து, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சுதாகர், மதியழகன், மயில் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு தொழில்முனைவு குறித்து ஆர்வத்துடன் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Similar News