நடிகர் சிலம்பரசன் பிறந்தநாள்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய நாமக்கல் எஸ்டிஆர் ரசிகர்கள்!

நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை ஒட்டி நாமக்கல்லில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் எஸ்டிஆர் ரசிகர்கள் நேரடியாக கலந்து கொண்டு, அவர்களுக்கு அன்புடன் மதிய உணவு பரிமாறினர்.;

Update: 2026-02-03 17:07 GMT
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட தலைமை சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பில், நாமக்கல் -திருச்சி சாலையில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.பிப்ரவரி 3 அன்று கொண்டாடப்பட்ட சிலம்பரசன் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆதரவற்ற குழந்தைகளுடன் எஸ்டிஆர் ரசிகர்கள் நேரடியாக கலந்து கொண்டு, அவர்களுக்கு அன்புடன் மதிய உணவு பரிமாறினர்.இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் குரு, சித்திக், சதீஷ், ராஜேஷ், பிரகாஷ், காதர், ராக்கன் ஜீவா உள்ளிட்ட எஸ்டிஆர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு, சமூக சேவையில் ஈடுபட்டனர்.இவ்வகை மனிதநேய நடவடிக்கைகள் தொடர வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Similar News