அண்ணா அவர்கள் 57.வது நினைவு தினத்தை ஒட்டி ராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் சமபந்தி விருந்து. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களுக்கு உணவு பரிமாறி,உணவு அருந்தினார்..

அண்ணா அவர்கள் 57.வது நினைவு தினத்தை ஒட்டி ராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் சமபந்தி விருந்து. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களுக்கு உணவு பரிமாறி,உணவு அருந்தினார்...;

Update: 2026-02-03 13:56 GMT
பேரறிஞர் அண்ணா அவர்களின் 57.வது நினைவு தினத்தை ஒட்டி தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ஆலயத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் கலந்து கொண்டு கைலாசநாதர் கோவிலில் வழிபாடு செய்து பின்னர் சமபந்தி விருந்தில் பொதுமக்களுக்கு உணவு பரிமாறி மக்களுடன் அமர்ந்து அமைச்சர் மதிவேந்தன் உணவு அருந்தினார். நிகழ்ச்சியில் ராசிபுரம் நகரமன்ற தலைவர் கவிதா சங்கர், திருக்கோவில் தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள், மற்றும் கோவில் செயல் அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

Similar News