10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை திறந்து வைத்து சிறபித்த அமைச்சர் மா.மதிவேந்தன்.

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார் ஆகியோர் அரசு திட்டங்களின்கீழ் புதிய பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினர்.;

Update: 2026-02-03 11:43 GMT

 நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் பகுதி மேம்பாட்டு (2025-2026) திட்டத்தின்கீழ், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை திறந்து வைத்தனர்.இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி வார்டு எண் 26 மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாநில அரசின் நமக்கு நாமே (2025-2026) திட்டத்தின்கீழ், ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கு அமைச்சர் வடிவேல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.இதன்படி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்க முன்பாக 760 சதுர கிலோ மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயர் து. கலாநிதி, துணை மேயர் செ. பூபதி, பர சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News