பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2026-02-03 08:13 GMT
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்,கிருஷ்ணாபுரம் கடைவீதி வழியாக அமைதி ஊர்வலம் வந்து அங்குள்ள அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதேபோல் பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், இரா.ப.பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, டி.கே.ராமச்சந்திரன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.இராஜ்குமார், செ.நல்லதம்பி, சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்ரன், பேரூர் கழகச் செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், ஆர்.அருண், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.எம்.மாரிக்கண்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்ஆகமது, மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், துணை அமைப்பாளர் தம்பை.தர்மராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜாராம், ஜி.கே‌.மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ரெங்கராஜ் மற்றும் வனிதா சுப்ரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Similar News