நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் உள்ள சவேரியார் கோயில் தெரு சுனாமி குடியிருப்பில் சுமார் 51 வீடுகள் உள்ளன. 21 ஆண்டுகள் குடியிருந்த அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சுனாமி காலகட்டத்தில் அரசால் கட்டி கொடுத்த சுனாமி வீடுகள் மேற்கூரைப் பெயர்ந்தும், தரமற்ற சுவர்கலாலும், படிக்கட்டுகள் உடைந்தும் எங்களால் குடியிருக்க முடியவில்லை, சமைத்துக் கொண்டிருக்கும் பொழுதும், தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதும், திடீரென காங்கிரீட்டுகள் பெயர்ந்து விழுவது அபாயத்தை எழுப்புகிறது. குழந்தைகள் கூட தொட்டிலில் நிம்மதியாய் தூங்க முடியவில்லை எனவும் பொதுமக்கள் மழை மற்றும் பேரிடர் காலங்களில் அவதிப்பட்டு வருவதாகவும். வீடுகளை சுற்றியும் அசுத்தமற்ற நிலையில் இருக்கும் குப்பைகள், குட்டைகள் என காணப்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். பலமுறை மனு கொடுத்தும் அரசு அலுவலர்கள் சரி செய்து தருகிறோம் என்றார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகிறோம் எனக் கூறியதாவது உடனடியாக சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 51 வீடுகளையும் புதுப்பித்து தருமாறு கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.