.தி.மு..க.விற்கு இனி எதிர்காலம் இல்லை முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசினார்.;
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசியதாவது: தி.மு/க. ஆட்சியில் சொன்னதை செய்யாத பணிகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகள் அனைத்து வார்டுகளில் நமது கழக நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும். 2026ல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி, எப்போது அ.தி.மு.க. ஆட்சி வருமென பொதுமக்கள் ஆர்வமுடன் நான் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள். இது மாநிலம் முழுதும் உள்ள நிலை. பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியில் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் 25ம் தேதிக்குள் தேர்தல் அறிவித்து விடுவார்கள். ஏப். 10 தேதிக்குள் தேர்தல் வந்து விடும். இந்த இரண்டு மாத காலம்தான் நாம் உழைக்கும் உழைப்புதான், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவும், அண்ணன் இடைப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதும் முடியும். உங்கள் உழைப்பு அடுத்து வரும் 5 ஆண்டு கால ஆட்சிக்கு மட்டும் அல்ல, 50 ஆண்டு கால அம்மாவின் ஆட்சி அமைய, உங்கள் இந்த இரண்டு மாத உழைப்புதான் காரணமாக இருக்க போகிறது. அதிக ஓட்டு எண்ணிகையில் நமது குமாரபாளையம் தொகுதி வெற்றி பெற வேண்டும். தி.மு.க.விற்கு இனி எதிர்காலம் இல்லை. தி.மு.க, ஆட்சி மீது பொதுமக்களுக்கு இருக்கும் கோபத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இலவச அடுக்குமாடி வீடு, ஆண்களுக்கும் இலவச பஸ், பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், மானிய விலையில் ஸ்கூட்டி, உள்ளிட்ட திட்டங்களை இடைப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குமாரபாளையம் காவேரி நகரில் சமுதாய கூடம் கட்ட ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கொடுத்தும், நன்கு முறை திருப்பி அனுப்பி விட்டனர். கலெக்டர் எ;அலுவலகம், நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கூறியதால், தற்போது அந்த பணி துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் புதல்வர் தரணிதரன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன், மாவட்ட ஐ.டி. விங் செயலர் முரளி, கவுன்சிலர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சிங்காரவேல், அர்ஜூனன், சேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.