திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாக பயிற்றுநர்கள் மனு அளித்தனர்
Dindigul;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாக பயிற்றுநர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு பள்ளிகளில் பல்வேறு பணிகளை செய்து வந்தாலும் ஊதியம் தனியார் நிறுவனத்தின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு சம்பளம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதியத்தை உடனடியாக உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது