வெண்ணந்தூர் பகுதியில் 10.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்...
வெண்ணந்தூர் பகுதியில் 10.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றிய, பேரூர் பாமக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கோ. குணசேகரன் தலைமையில் மா.வடிவேல், முன்னிலையில் ரத்தினவேல் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் வடிவேலன், மாநில இளைஞர் சங்கத் துணைச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில், வெண்ணந்தூர் ஒன்றிய பாமக சார்பில் வெண்ணந்தூர் பஞ்., உட்பட்ட முத்துகுமாரசுவாமி கோவில் அருகில் உள்ள அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து நிலையம் அமைத்து தரக்கோருதல். காமராஜர் சிலை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு இன்று வரை பள்ளியை தரம் உயர்த்த போதுமான அரசுக்கு சொந்தமான இடம் இருந்தும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் பள்ளி தரம் உயர்த்த தடையாக உள்ளதால் அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பள்ளியை விரிவாக்கம் செய்து நடுநிலை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தரக் கோருதல். காவலர் குடியிருப்பு முதல் மின்னக்கல் பிரிவு சாலை வரை போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக் கோருதல். நகர்புற மின்சார வாரியத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின்சார பராமரிப்புக்கு களப்பணியாளர்கள் 18 பேர் இருக்க வேண்டிய பணியில் ஒருவர் மட்டுமே உள்ளார். மீதமுள்ள காலி பணியிடங்களை நிரப்பி தரக் கோருதல். உள்ளிட்ட பல்வேறு 10.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், வெங்கடாசலம், ரத்தினவேல், சண்முகம், கணேசன், மணி,ராமு,தங்கம்,பாஷா, ஆறுமுகம், மூர்த்தி, ரமேஷ், குப்புசாமி, சௌந்தர்ராஜன், அத்தனூர் பேரூர் செயலாளர் சிவக்குமார் மோகன்ராஜ், மற்றும் மகளிர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100.க்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டனர்..