போதை பயணம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்

து அருந்தி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.;

Update: 2026-02-02 11:44 GMT
குமாரபாளையத்தில் திருவள்ளுவர் வாசுகி நற்பணி மன்றத்தின் சார்பில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை இல்லா பயணம் என்ற மாரத்தான் போட்டி நடந்தது. . எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகள், மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் மற்றும் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டி திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோவிலில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று எல்லையை தொட்டுவிட்டு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் மூவாயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியினை குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன், அட்மா தலைவர் நாச்சிமுத்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Similar News