எலச்சிபாளையத்தில் காவேரி ஆறு திருமணிமுத்தாறு பொன்னி ஆறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடுஎலச்சிபாளையத்தில் காவேரி ஆறு திருமணிமுத்தாறு பொன்னி ஆறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக 100 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2026-02-02 09:31 GMT
பல்வேறு காலகட்டங்களில் காவிரி ஆற்றில் வருகின்ற உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது வெள்ளம் ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்புகள் ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதமாக காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு இனைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் மோர்பாளையம் பிரிவு சாலையில் இருந்து 100 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர் இங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார் காவேரி ஆறு புண்ணியாற திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது மேலும் கொன்னையாறு பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது சேலம் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறும் போது 1950 ஆம் ஆண்டு முதல் காவிரி புண்ணியாறு திருமணிமுத்தாறு இனைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கூறி வந்தனர் காவிரியில் அதிகமாக வெள்ளம் வந்தால் அதனை நாமக்கல் சேலம் மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்களில் நிரப்பி பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் விவசாய நிலங்கள் நிலத்தடி நீர் பெற்று பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் இதனை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கடந்த முறை ஆட்சிக்கு வந்த போது இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது ஆனால் இதுவரை அது நடத்தப்படவில்லை இதனால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் கோரிக்கை நிறைவேறும் வரை ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார் சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் சேலம் மாவட்ட செயலாளர் வேலவன் திருச்செங்கோடு வட்டார செயலாளர் ராமசாமி ராஜா என்கின்ற மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News