கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அம்மா கபடி லீக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கினார்.

கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அம்மா கபடி லீக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்க பரிசு ரூபாய் 3,33,560 மற்றும் சுழல் கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2026-02-02 07:13 GMT
கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அம்மா கபடி லீக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்க பரிசு ரூபாய் 3,33,560 மற்றும் சுழல் கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அம்மா கபடி லீக் போட்டி நேற்று முன் தினம் துவங்கி நேற்று இரவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து ஆண்கள் பிரிவில் 82 அணியும், பெண்கள் பிரிவில் 16 அணியும் கலந்து கொண்டனர். இந்த போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் குளக்காரன் பட்டி பாரதி அணியும், எஸ் புதூர் Young ஸ்டார் அணியும் மோதியதில் 45க்கு 35 என்ற புள்ளி கணக்கில் குளக்காரன்பட்டி பாரதி அணி முதலிடம் பெற்றது. பெண்கள் பிரிவில் சேரன் கரூர் அணியும், கவுண்டம்பட்டி கலைப்புயல் கிளப் அணியும் மோதியதில் 43 க்கு 31 என்ற புள்ளி கணக்கில் கரூர் சேரன் அணி முதலிடத்தை பெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல் நான்கு இடங்கள் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு வீரர்களுக்கு ரூபாய் 3,33,560 ரொக்கப் பரிசு மற்றும் சுழல் கோப்பை வழங்கி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார்.

Similar News