பேருந்து நிழற் குடையினை திறந்து வைத்தார் அமைச்சர்
ஐந்து லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் பெரிய வெண்மணி ஊராட்சியில் குன்னம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2024- 2025 இன் கீழ் ரூ.5.00 லட்சம் மதிப்பில் வெண்மணி தொழிற் பயிற்சி நிலையம் அருகில் கட்டபட்டுள்ள பேருந்து நிழற் குடையினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (02.02.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. மிருணாளினி , ஊட்டி செல்லப்பிள்ளை உள்ளார் .