முருகன் கோவில் காவடிகளுக்கு கும்பாபிஷேக விழா
குமாரபாளையம் அருகே முருகன் கோவில் காவடிகளுக்குகும்பாபிஷேக விழா;
குமாரபாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ராஜாஜி நகர் பாலசெல்வகுமரன் கோவில் காவடிகளுக்கு கும்பாபிஷேக விழா ஜன. 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து பெண்கள் மற்றும் ஆண்கள் மஞ்சள் ஆடையுடன் தீர்த்தகுடங்கள் எடுத்து வர, முருக பக்தர்கள் பலர் காவடி ஆடியவாறு ஊர்வலத்தில் வந்தனர். இரு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 08:30 மணியளவில் காவடிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வலம்புரி விநாயகர், பாலசெல்வகுமரன் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது