ராசிபுரத்தில் தவெக சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்..
ராசிபுரத்தில் தவெக சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்..;
தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த்.அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ. விஜய் செந்தில்நாதன், அவர்களின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டி, பெண்களுக்குப் புடவை, இனிப்புகள், விசில், மற்றும் துண்டுபிரசுரம் என பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகரம், ஒன்றியம், பேரூர் கிளை, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, மற்றும் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி, கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.