செய்தி நாளிதழ் பேப்பரில் ஆடை வடிவமைத்த பெண்.

பிரபலமாகவும், திறமையை காட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக பெண் தகவல்;

Update: 2026-02-02 14:38 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.கவுண்டம்பாளையத்தை சேர்ந்த திவ்யபாரதி, இவரது கணவர் சின்ராஜ், மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யபாரதி நாளிதழ் பேப்பரை கொண்டு அழகான ஆடையை தயார் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த ஆடையை பார்த்து வியந்தனர். இதுகுறித்து திவ்யபாரதி கூறுகையில்:- எந்த பொருளும் வேஸ்ட் என நினைக்க கூடாது என்பதற்காகவும், தனது திறமையை வெளிகாட்டவே பழைய செய்தி தாள்களை கொண்டு ஆடையை தயார் செய்து அதனை பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் காட்டவே கொண்டு வந்துள்ளேன், ஏற்கனவே திருக்குறள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளவும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதனை படிக்க வலியுறுத்தி பழைய செய்திதாள் பேப்பரில் தாமரை பூவில் 1330 திருக்குறள் இருப்பது போல் வடிவமைத்திருந்தேன் எனவே மாவட்ட நிர்வாகம் தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், தனது திறமையை வெளிகொண்டு வந்து கின்னஸ் சாதனை படைக்க மீடியா ஆதரவு தேவை என அவர் பேசினார்.

Similar News