பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வரன் மகனுக்கு நடைபெறவுள்ள திருமண விழாவிற்கான அழைப்பிதழை;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-02-02 13:21 GMT
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நேரில் வழங்கினார். இவ்விழாவில், சமூக, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. தேசிய அளவிலான தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்ட இந்த அழைப்பிதழ் நிகழ்வு, குடும்ப விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.இந்த சந்திப்பு மிகுந்த மரியாதை மற்றும் நல்லுறவு சூழலில் நடைபெற்றதாகவும், திருமண விழாவிற்கு தலைவர்களின் வாழ்த்துகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.