கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த ரூ.97,33,543-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த ரூ.97,33,543-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.;
கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த ரூ.97,33,543-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர். கரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் தொலைந்த செல்போன்களை கண்டறிய சைபர் க்ரைம் போலீஸார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதேபோல, ஆன்லைன் வேலை, ஆன் லைன் முதலீடு, டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற பல்வேறு முறைகளில பணத்தை இழந்த 15 நபர்கள் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையிலும் சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி னர். இதில் 136 செல்போன்கள், சைபர் குற்றங்கள் மூலம் இழந்த 97,33,543 ரூபாயை மீட்டனர். இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் மீட்கப்பட்ட செல்போன்களையும் பணத்தையும் உரிய நபர்களிடம் ஒப்படைத்து பேசுகையில், சைபர் குற்றங்களில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பேரில் பலர் இப்பொழுது பணத்தை பறித்து வருவதாகவும், டிஜிட்டல் அரஸ்ட் என்பது உலகத்திலேயே எங்கும் கிடையாது எனவும், அவ்வாறு உங்களை தொடர்பு கொள்ளும் நபர்கள் குறித்த உடனடியாக சைபர் க்ரைம் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.