ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு போரடித்த சமூக அலுவலர் புகார் மனு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் இராயவரம் ஊராட்சி மன்ற தலைவியின் கலைச்செல்வி என்ற மீனா பதவி காலத்தில் (2020-2023 ) ஊராட்சி நிதியை தன்னிச்சையாக முறைகேடாக பயன்படுத்தி ஊராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது;
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் இராயவரம் ஊராட்சி மன்ற தலைவியின் கலைச்செல்வி என்ற மீனா பதவி காலத்தில் (2020-2023 ) ஊராட்சி நிதியை தன்னிச்சையாக முறைகேடாக பயன்படுத்தி ஊராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது சம்பந்தமாக 2020- 2023 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இராயவரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் க.கணேசன் வழக்கு தொடர்ந்தார் (வழக்கு எண்- wp(MD)18035/2024 WP(MD)28066/2024 வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் தணிக்கை அதிகாரிகள் ஊராட்சி கணக்குகளை ஆய்வு செய்து முறைகேடு மற்றும் நிதி இழப்பை உறுதி செய்து தண்டத்தீர்வை ரூ466,422 முன்னால் ஊராட்சி மன்ற தலைவிக்கு விதித்து 30 நாட்கள் மேல் முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கி 2.9.2025 அன்று ஊராட்சி மன்ற தலைவிக்கு கடிதம் வழங்கப்பட்டது, 30 நாட்கள் கடந்து சில மாதங்கள் ஆகியும் மேற்படி முன்னால் தலைவியிடம் தண்டத்தீர்வையை வசூல் செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 8.12.25 மற்றும் 22.12.25 தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று 2.2.2026 மனு நீதி நாளில் மேற்படி நபரிடம் விரைவில் தண்டத்தீர்வையை வசூல் செய்ய வேண்டும் என இராயவரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பையா மகன் க.கணேசன என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்களை சந்தித்து புகார் மனு வழங்கினார்