முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்(வநேட்ரா குழுமத்தின் ஓர் அங்கம்) நடைபெட்ற வேலைவாய்ப்பு முகாம்.

வநேத்ரா கல்வி குழுமத்தைச் சேர்ந்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்-ல் சென்னையில் உள்ள டேட்டா பேட்ரன்ஸ் (DATA Patterns) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினரால் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டது. இதில் நமது பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2026-02-03 11:30 GMT

டேட்டா பேட்ரன்ஸ் (DATA Patterns) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வளத்துறையின் மேலாளர்  V.உதயகுமார், உற்பத்தி மேலாளர்  J.யுவராஜ் மற்றும் உற்பத்தி இணை மேலாளர்  இரவீச்சந்தரன் அவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவ மாணவியரை வேலைக்குத் தேர்வு செய்ய வந்திருந்தனர். மின்னியல், மின்னணுவியல், மற்றும் மின்னணுவியல் & கருவிமயமாக்கல் துறையை சேர்ந்த மாணவர்கள் சுமார் 98 பேர் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்-ஐ சேர்ந்த 10 பேர் மற்றும் பிற கல்லூரியிலிருந்து 9 மாணவ மாணவியர் மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களது இறுதி ஆண்டு படிப்பை முடித்த பின் வேலையில் சேர உள்ளனர்.வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.பணி நியமன ஆணைகளை டேட்டா பேட்ரன்ஸ் (DATA Patterns) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வளத்துறையின் துணை மேலாளர் உற்பத்தி மேலாளர், உற்பத்தி இணை மேலாளர் மற்றும் இன்ஸ்டிடியூசனின் செயலாளர், முதல்வர் ஆகியோர் வழங்கினார்கள்.வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவ மாணவியரை கல்லூரியின் தாளாளர்  கே.பி.இராமசுவாமி   செயலாளர்  R.முத்துவேல்   முதல்வர் Dr.R.மணி   அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.கேம்பஸ் இன்டர்வியூக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறைத்தலைவர் S.சங்கர் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News