சாலையில் படுத்து திடீர் மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்லில், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில், காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சாலையில் படுத்து திடீர் மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
முன்னதாக, இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் குர்ஷித் பேகம் தலைமை வகித்தார்.இதில், திமுக தேர்தல் வாக்குறுதி 313 நிறைவேற்றிடுக, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புக, பணி நிரந்தரம் செய்திடுக என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் கோசங்கள் எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் பிரதான சாலையில் சென்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கன்வாடி மைய பணியாளர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்ய முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டுமென கோரி சாலையில் அமர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நாமக்கல் காவல் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த கோரிக்கை மறியல் போராட்டம் மற்றும் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தினால் நாமக்கல் பிரதான சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.