திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி மெயின் சாலையில் சீவலப்பேரி ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் எதிரே மாடுகள் இரவு நேரங்களில் சாலைகளில் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய ஊராட்சி நிர்வாகம் அலுவலகம் முன்பே இவ்வாறு மாடுகள் படுத்திருப்பது பெரும் அவல நிலை என குற்றம் சாட்டியுள்ளனர்.